search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணி கைது"

    ஓடும் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய பயணியை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    ரெயிலில் திருவனந்தபுரம், பாப்பனகோடு பகுதியை சேர்ந்த ராமசாமி(வயது36) என்பவர் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

    இந்த ரெயிலின் டிக்கெட் பரிசோதகராக லார்டுவின் ஆனந்த் என்பவர் இருந்தார். ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது லார்டுவின் ஆனந்த் முன்பதிவு பெட்டியில் உள்ள ஒவ்வொருவரிடமும் பயண டிக்கெட்டை பரிசோதித்து வந்தார். ராமசாமி டிக்கெட்டையும் பரி சோதித்து கொண்டிருந்தார்.

    அப்போது லார்டுவின் ஆனந்துக்கும், ராமசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென ராமசாமி டிக்கெட் பரிசோதகரை தாக்கினார்.

    இதையடுத்து ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தது. டிக்கெட் பரிசோதகர் ஈரோடு ரெயில்வே போலீசில் இது குறித்து புகார் செய்தார்.

    அதன் பேரில் வழக்குபதிவு செய்த ரெயில்வே போலீசார் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய ராமசாமியை கைது செய்தனர்.

    போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்றவர் சென்னை விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டார். #FakePassport
    சென்னை:

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமானம் தயார் நிலையில் இருந்தது. அப்போது அங்கு வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை சேர்ந்த கருணாகரன் என்பவர் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்ல அங்கு வந்தார். அப்போது அவரிடம் இருந்த பாஸ்போர்ட்டை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அது போலி பாஸ்போர்ட் என தெரிய வந்தது.

    இதையடுத்து, அவரது பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #FakePassport
    ×